ராஜமௌலியின் ‘RRR’ படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.!

Published by
Ragi

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தில் நடிக்கவுள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது.ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலியின் RRR படத்தில் விஜய்யின் அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகையான ஸ்ரேயா இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ரேயா தான் RRR படத்தில் நடிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்புகள் ஆரம்பித்ததும் இந்தியா வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு வரும் பிளாஷ்பேக்கில் அவருக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே அஜய் தேவ்கனுடன் ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago