மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம் ஜி ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எந்தவொரு ஸ்பெஷல் தினத்தையும் போஸ்ட்ர் ஒட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியரின் 21வது திருமண நாள். அதனை கொண்டாடிய மதுரை ரசிகர்களின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே மற்றும் புரட்சி தலைவியே என்று கூறி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம். ஜி. ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ளது இதனை கில்லி சிவா என்ற மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் ஒட்டியது என்றும், அந்த போஸ்ட்ரில் மதுரை விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று விஜய் சங்கீதாவை சித்தரித்து ஒட்டப்பட்ட இந்த போஸ்ட்ர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…