மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!

மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி மற்றொரு கன்னட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். விஜய்யின் கதாபாத்திரம் எவ்வாறு புகழப்பட்டதோ அதேபோல ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாகவும் ரசிகர்களால் புகழப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து கலக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கன்னடத்தில் யாஷ் நடித்த கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நிகில் அவர்கள் அடுத்ததாக பிரபாஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025