சாம் ஆண்டன்-அதர்வா படத்தின் கதாநாயகியாகும் விஜய் சேதுபதி பட நடிகை.!

Published by
Ragi

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,தள்ளி போகாதே,ஒத்தைக்கு ஒத்த ,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் .

அதன்பின் சமீபத்தில் அதர்வா அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இவர் ஏற்கனவே அதர்வாவின் 100 எனும் படத்தினை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும்,தந்தை-மகன் இடையே உள்ள சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்க உள்ள இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தன்யா ரவிச்சந்திரன் ஏற்கனவே விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் நேற்று கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்டரி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…

1 hour ago

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…

2 hours ago

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…

2 hours ago

ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…

3 hours ago

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

3 hours ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

4 hours ago