Vijayakanth [File image]
நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் இருந்தே வயிறு நிறைய அனைவர்க்கும் சாப்பாடு போடுவது. கஷ்டப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வது என பலருக்கும் தெரியாமலே உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் உதவி செய்த யாருக்கும் தெரியாத சில தகவல்களையும் அவருடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறுவது உண்டு.
அந்த வகையில் ஒரு வருக்கு உதவி தேவை என்று செய்தியை பார்த்தே தெரிந்து கொண்ட விஜயகாந்த் உடனடியாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கள்ளழகர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் என்கூட அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
அந்த சமயம் நான் ஒரு பத்திரிகையின் செய்தியை படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பத்திரிகையில், அதில் ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் அவருக்கு ரொம்பவே பணம் தேவை படுவதாக போட்டிருந்தது. இதனை நான் படித்துக்கொண்டிருந்த போது விஜயகாந்த் அதனை பார்த்துவிட்டு என்னையா அது? என்று கேட்டார்.
விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..
அதற்க்கு நான் அதில் போட்டிருந்த விவரங்களை காமித்தேன். அவர் அந்த செய்தியை என்னிடம் இருந்து வாங்கி கொண்டு படித்தார். படித்து முடித்து அடுத்த நாள் அவர்களுக்கு தேவையான 4 லட்ச ரூபாயையும் மொத்தமாக விஜயகாந்த் கொடுத்து உதவி செய்தார். அந்த சமயம் அதாவது 1998-ஆம் ஆண்டு எல்லாம் லட்ச கணக்கு ரூபாய் என்பது பெரிய விஷயம். ஆனால், கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல் உதவி என்றவுடன் அவர்களுக்காக பணம் கொடுத்து விஜயகாந்த் உதவி செய்தார்” என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
இந்த உதவி மட்டும் இல்லை இதைப்போலவே விஜயகாந்த் பல உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். இப்படி உதவி செய்த மனிதரின் தற்போதைய நிலை அனைவரையும் கண்கலங்க வைக்கும் விதமாக இருக்கிறது. ஏனென்றால், காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…