அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறினார்.
தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றுஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.
அதில் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேரணி நடத்தினர். அதே நேரத்தில் டிரம்ப்பிற்கு எதிரானவர்கள் பேரணி நடத்தினர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…