களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டமிட்டுளேன் – என்.ராஜசேகர்..!

இயக்குனர் என்.ராஜசேகர் களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டம் வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள நடிப்பில் வெளியான படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.
நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் என்.ராஜசேகர் களத்தில் சந்திப்போம் படம் மாதிரி அஜித் விஜய் இருவர்களையும் சேர்த்து படம் இயக்க அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக இயக்குவேன் என்றும் களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டம் வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025