தனி விமானத்தில் புறப்பட்ட சூப்பர் ஸ்டார்…. காரணம் என்ன..?

இன்று நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
நேற்று ரஜினி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினிக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் .
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.