எப்போ கதாநாயகியா ஆகப்போறிங்க என்ற கேள்விக்கு அனிகா சுரேந்திரன் பதிலளித்துள்ளார்.
அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து மக்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். சமீபகாலமாக தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் பேசிய அனிகா சுரேந்திரன் இது குறித்து கூறுகையில் ” எல்லாத்துக்கும் அது அதுக்கென்று வரும் அப்போது தான் கதாநாயகி ஆகி விடலாம். இப்போதுதான் நான் +1 படித்து வருகிறேன். நடிக்க கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி நல்லா நடிக்கணும். அனிகா நல்ல நடித்துள்ளார் என்று ரசிகர்களிடம் இருந்து பேர் வாங்கணும் அது மட்டும் தான் என் மனதில் இப்போது இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…