விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..!

விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது வடிவேலு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பல்வேறு இன்னல்களையும், தோல்விகளையும் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று தான் துள்ளாத மனமும் துள்ளும். ல் எழில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படம் இயக்குநர் எழில் விஜய்க்காக எழுதவில்லையாம். இந்த படம் வடிவேலுக்காக தான் முதலில் எழுதப்பட்டதாம். ஆனால் சில பல காரணங்களால் விஜய் இந்த படத்தில் நடிக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது..
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025