உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன – பிரதமர் மோடி.
நாம் எனப்படும் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தனது பல்வேறு கருத்துக்களை அதில் முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ‘ உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்துடன் அதனை மக்கள் இயக்கமாகவும் இந்தியா மாற்றியுள்ளது.
இந்தியா இதுவரை 121 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் புதிய பரிணாமத்தை நோக்கி செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தின் மீது மட்டும் அக்கறை கொள்ளாமல் தனி மனித நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். ‘ என தனது கருத்துக்களை பிரதமர் மோடி அமைப்பு சாரா நாடுகளுடனான காணொளியில் முன்வைத்தார்.