வலிமை டைட்டில் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 500 நாட்கள் ஆனதால் வலிமை அப்டேட் வருமா என்று அஜித் ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடந்து வந்த இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்ட தட்ட முடிந்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வலிமை படத்திற்கான டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியானது. டைட்டில் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 500 நாட்கள் ஆனதால் #500DaysOfVALIMAITitle என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் வலிமை அப்டேட் வருமா என்றும் காத்துள்ளார்கள்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…