wow.! பிரமாண்ட கெட்டப்பில் களமிறங்கிய பொன்னியின் செல்வன் குழுமம்.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் 2 பாக ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது. தற்போது முதல் பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கான டப்பிங், எடிட்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் திரிஷா, பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி உலகம் முழுவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Wishing our Chairman Allirajah Subaskaran a very happy birthday! The Golden Era comes to the big screens on Sept 30th! ????#PS1 #PS1FirstLooks @MadrasTalkies_ pic.twitter.com/jJ03A59vcm
— Lyca Productions (@LycaProductions) March 2, 2022