#BREAKING: உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு..!

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடந்தி வரும் நிலையில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு.
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த பஞ்சாபை சார்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் உயிரிழந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொள்ள முடியாமல் இந்திய மாணவர் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் சந்தன் ஜிண்டால் (22) வின்னிட்சியா தேசிய மருத்துவ கல்லுரியில் படித்து வந்தார்.
சந்தன் ஜிண்டாலுக்கு திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையை தொடரமுடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவருடன் அவரது மாமா உள்ளார். தற்போது அவரும் உக்ரைனில் சிக்கி உள்ளார். இறுதி சடங்கிற்க்காக அவரது உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு மத்திய அரசிற்கு மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025