இனி செல்போனில் இதை செய்ய முடியாது.. Google போட்ட அதிரடி தடை!

Published by
பாலா கலியமூர்த்தி

பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அறிவிப்பு.

மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. IOS அதாவது ஆப்பிள் போன் இயங்குதளத்தில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ளது. IOS-வுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் எளிதாகவும், புதுவிதமான சிறப்புக்கள் உள்ளதால் மக்கள் அதிகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை ரெக்கார்டிங் செய்வது என்பது எளிதான ஒன்று. ஸ்மார்ட்போன்களில் உள்ள டையளரில் உள்ள ரெக்கார்டிங் அம்சங்கள் மூலமாகவும் அல்லது மூன்றாம் தரப்பு செயலிகள் மூலமாகவும் கால் ரெக்கார்டிங் செய்யும் அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு நிகர் ஏதும் இல்லை. ஆனால், தற்போது பயனர்களின் பாதுகாப்பு கருதி கூகுள் நிறுவனம் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது.

அதன்படி, Google நிறுவனத்தின் Play Store-யின் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட புதிய கொள்கைகள் முதல் (மே 11) அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிறுவனம் அனைத்து மூன்றாம் தரப்பு அழைப்பு பதிவு செய்யும் செயலிகளை அதன் தளங்களில் தடை செய்துள்ளது. அதன்படி, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் நிறுவியிருக்கும் எந்த அழைப்புப் பதிவு பயன்பாடுகளும் செயல்படாது என கூறியுள்ளது.

இதனால், பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது என்றும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் இதற்கான முன்னணி செயலிகள் அனைத்தும் நீக்கப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சேகரிக்க சம்பந்த இல்லாத வெளி செயலிகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது என கூகுள் கூறியுள்ளது.

கூகுளின் புதிய ப்ளே ஸ்டோர் புதிய கொள்கையின்படி, அழைப்புப் பதிவுகளைப் பெற நிறுவப்படாத பயன்பாடுகள் அனுமதிக்கப்படாது. அதாவது, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் Truecaller, Automatic Call Recorder, Cube ACR மற்றும் பிற பிரபலமான செயலிகள் வேலை செய்யாது. இதுவரை, கூகுளின் பிக்சல், சியோமி, சாம்சங் போன்கள் உள்ளிட்ட கூகுளுடன் இணைந்து பயன்படும் ஸ்மார்ட் போன்களில் உள்ள டயலர் பயன்பாடுகளில் இயல்பாகவே அழைப்புகளை பதிவு செய்யும் அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பித்தகக்து.

இந்த ஸ்மார்ட்போன்கள் உங்களிடம் இருந்தால் பயப்பட தேவையில்லை. இருப்பினும், இந்தக் கொள்கையை Google எவ்வாறு செயல்படுத்த விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. Google Play Store-லிருந்து அனைத்து மூன்றாம் தரப்பு அழைப்புகளைப் பதிவுசெய்யும் பயன்பாடுகளையும் தடைசெய்யுமா அல்லது டெவலப்பர்களை தங்கள் பயன்பாடுகளை அகற்றும்படி கேட்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…

18 minutes ago

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

1 hour ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

2 hours ago

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…

3 hours ago

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!” விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…

4 hours ago