அடுத்த 2 நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு? – வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் மையம் கொண்ட டானா புயல் தீவிர புயலாக மாறியது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 2 நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அதன்படி, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பேராம்பலூர், அரியலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.