இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த பிறகு வலுக்குறைந்தது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (டிச .02) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025