தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, […]
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் […]
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வருவதால், திருவள்ளூரில் ஒரு சில இடத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வரும் நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் ஒரு சில […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்வதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு […]
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து வருகிறது. அதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையினை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் […]
இன்றும் நாளையும் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன். தமிழகத்தில் வடதமிழகம் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலு குறையும் என்பதால், இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு […]
சென்னை உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், […]
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, […]
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும், 21, 22 ஆம் தேதியில் மிக கனமழை பெய்யும் […]
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் தமிழ்நாட்டில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு […]
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதில், 21-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அதேபோல் 22-ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிக […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுவதால், நவம்பர் 20 முதல் 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதோடு, வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலமாகவும், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய […]
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 19-ஆம் […]
நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை முதல் மறு உத்தரவு வரும் […]
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது […]
இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய […]
அடுத்த ஓரிரு மணிநேரங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இனி வரும் மழையையும் எதிர்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் […]
கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. அதில் மிதமான மழை.கனமழை என மாறி […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல். வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழக வானிலை, மலையளவு குறித்த விவரங்களை வெளியிட்டார். அவர் குறிப்பிடுகையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என தெரிவித்தார். அதிகபட்சமாக மயிலாடுதுறையில் அதிக மலையளவு பதிவாகியுள்ளது […]