விழுப்புரம்: நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகல் முதல் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
விழுப்புரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது புயல் கரையை கடக்கும் போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை […]
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி உள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. புயல் கரையை கடப்பதன் காரணமாக […]
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கடலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.29) விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் […]
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றைய தினமே இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிப்பின் படி மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையின் காரணமாக நேற்றைய தினமே இன்று நாகை மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது, இது இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று முதலே அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி […]
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது . ஏனென்றால், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக வெளியாகி வரும் செய்தி மழையின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்கிற வகையில் பயமடைய செய்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி (நாளை) சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு […]
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு […]
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி […]
சென்னை : வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுப்பெற்றதென வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் விளைவாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. கனமழையின் தீவிரத்தால் இன்று புதுச்சேரி, சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். அதில், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் […]
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சென்னையை போலவே, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் […]
மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர்,காவேரிப்பட்டினம்,மத்தூர்,ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைபோல் ,தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்வதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை ஒருநாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ 4) மற்றும் நாளை மறுநாள் (நவ 5 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.