கடலூர் :தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் கடலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககடலூர்மாவட்டத்தில் நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.29) விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
