கனமழை எச்சரிக்கை : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tn school leave

விழுப்புரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது

புயல் கரையை கடக்கும் போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே, கனமழை காரணமாகவும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த காரணத்தால் கடலூர் மாவட்டத்தில்  நாளை(நவ.30)கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து இப்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்