விக்கிரவாண்டி : அரசியலில் அடுத்த நகர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான, ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். காவல்துறை வைத்த முக்கிய கேள்விகள் மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி […]
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மிகவும் முக்கிய கேள்வியாக ‘மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த அரசியல் நகர்வாக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான். இது தொடர்பாக கடந்த, ஆகஸ்ட் 28-ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த அனுமதிக்கேட்டு, விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். முன்னதாக, செப்டம்பர் […]
விக்கிரவாண்டி : த.வெ.க மாநாடு நடத்த அனுமதிக்கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் முதல் மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பதற்காக தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், கட்சியின் கொடி அறிமுக விழாவில் விஜய் குறைவான நேரம் மட்டுமே பேசினார். எனவே, பேச வேண்டிய பல விஷயங்களை கட்சியின் முதல் மாநாட்டில் பேசுவார் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் மாலை 5 மணி நிலவரப்படி பேர் வாக்களித்துள்ளனர். 276 […]
விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி […]
விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடிகர் தாடி பாலாஜி, 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை பரிசாக வழங்கினார். பின்னர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “என்னால் முடிந்ததை பள்ளிக்கு செய்தேன், அரசுப்பள்ளிகள் தற்போது சிறப்பான பள்ளிகளாக […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், […]
நாளை (ஜனவரி 8) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
திமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர் என விழுப்புரத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு. விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் ஒழிந்தியாம்பட்டுவில் ரூ.42.69 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். ரூ.42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து ரூ.24 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 10 […]
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த […]
பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார். அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை […]
தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி, தனது குழந்தையை தாக்கியதும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் […]
விழுப்புரம் மாவட்டத்தின் கச்சிராயப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியின் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததால் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகள் அன்பரசி மேலும் அதே பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன் இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர் , இவர்கள் இவருக்கும் காதல் அதிகமானதால் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதை தொடர்ந்து விஸ்வநாதனுக்கு கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் […]
விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கக்கன் கிராமத்தை சேர்ந்த மணிமொழி , பவதாரணி கௌசல்யா ஆகியோர் அங்கே உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.இன்று விடுமுறை நாள் என்பதால் 3 மாணவிகளும் கிணற்றில் துணி துவைக்க அவர்கள் சென்றனர். தூணிதுவைக்க சென்ற 3 பேரில் பவதாரணி கால் தவறி கிணற்றில் விழுந்து உள்ளார். அவரை காப்பாற்ற மணிமொழி , கவுசல்யாவும் முயற்சித்துள்ளனர். ஆனால் […]
குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து உதைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் அதே தெருவில் உள்ள ஓம் பிரகாஷ் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது 2 குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்த கொண்ட அந்த இளைஞர் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் பின் பக்கம் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு […]
விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதால், விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்துவந்தன. இதைத் தொடர்ந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து பிரிவு பறக்கும் படையினர், 10-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.உரிமம் இன்றியும், முறையாக பராமரிக்கப்படாமலும் இயக்கிய […]
விழுப்புரத்தில் பெண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்க வந்த தம்பதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விழுப்புரம் நேரு வீதியில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த, இந்திராணி என்ற பெண்ணிடம் ஒரு தம்பதி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் அவர்களை விசாரித்த போது, கடந்த 31-ம் தேதி இந்திராணிக்கு பெண் குழந்தை பிறந்ததும், அதனை சகாதேவன், ஜோதிக்கு விற்பனை செய்ய இந்திராணி ஒப்புக் கொண்டதும் தெரியவந்தது. 30 ஆயிரம் […]