விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (03.12.2024) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain tn school leave

விழுப்புரம் :ஃபெஞ்சல் புயல் காரணமாக,  புதுச்சேரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. எனவே, வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு உள்ளே இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் விடுமுறை பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தொடர் மழை மற்றும் மீட்பு பணிகள் காரணமாக நாளை விழுப்புரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் (03.12.2024)  விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கான அலர்ட் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.