அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று […]
தெஹ்ரான் : இஸ்ரேல் – ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல போரில் இன்று அமெரிக்காவும் நேரடியாக இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய அணு உலைத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், இதை “பெரிய இராணுவ வெற்றி” என்றும் கூறினார். […]
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதல்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக […]
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்,” என்று அறிவித்துள்ளது. ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமன் தனது கடல் எல்லைப் பகுதியான சிவப்புக் கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. […]
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளன. அமெரிக்க செனட் சபையின் முன்னாள் பெரும்பான்மைத் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான சக் ஷூமர், “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஈரானை தாக்கியதற்கு டொனால்ட் டிரம்ப் பதில் அளிக்க வேண்டும்,” என்று கடுமையாக விமர்சித்தார். இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஈரான் மோதலின்10-வது நாளில், அமெரிக்கா முதல் முறையாக நேரடியாக களமிறங்கியதைக் குறிக்கின்றன, […]
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்த அமெரிக்கா இன்று திடீரென நேரடியாகவே போரில் இறங்கியது. இன்று ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று […]
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி போரில் நேரடியாக இறங்கியுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி ஈரானின் முக்கிய அணு உலைத் தளங்களான ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிப்பதற்காக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதைக் குறிக்கிறது. அமெரிக்க அதிபர் […]
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 முதல் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதலில், ஈரானில் 224 பேர் உயிரிழந்ததாகவும், இஸ்ரேலில் 24 […]
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இஸ்ரேலுக்காக […]
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், ‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்’என்று கோரியிருந்தார். தற்பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் தனது மௌனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவில், ”இந்தியா – பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பல நாடுகள் இடையே […]
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமைதி பரிந்துரைகளை முன்வைத்தார். ஆனால், இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுதலித்து, “நான் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை விரும்பவில்லை” என்று கூறி, புடினுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (ஜூன் 20, 2025) செய்தியாளர்களிடம் பேசிய புடின், இஸ்ரேல் மற்றும் […]
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே நேரத்தில் ஈரான் இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது அதே வேகத்தில் ஏவுகணைகளை வீசி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் […]
ஈரான் : இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஈரானே அதிக சேதங்களை சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 639 பேர் பலியான நிலையில், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இஸ்ரேலில் குடியிருப்பு பகுதிகளில், ஏவுகணைகளுக்குள் சிறிய ரக குண்டுகளை வைத்து ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த குண்டுகள் […]
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை நேற்று ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது, பீர்ஷெபாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இஸ்ரேலிய […]
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய “தனிப்பட்ட செலவு” என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது, இணையத்தில் கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் ஆறு நாட்களை கடந்து நீடித்து வருகிறது. நேற்று ஜெருசலேம் பகுதியில் இரவு முழுவதும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதால் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலை குறி வைத்து […]
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்காமல் மாநாட்டின் பாதியிலேயே டிரம்ப் வெளியேறினார். மோடியை சந்திக்காத டிரம்ப், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கிறது என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் உடன் உணவு சாப்பிட நேரம் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான விருந்துக்கு […]
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘SpaceX’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் வசதியில் அதன் பத்தாவது ராக்கெட்சோதனையின் போது, வெடித்துச் சிதறிய ‘ஸ்டார் ஷிப் 36’ ராக்கெட்டால் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வெடித்து சிதறிய போது, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், ஆனால் […]
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு தலைவர் கொமேனி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்கள் மற்றும் […]
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்படத்தில் வரும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் உடையணிந்து, மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்துள்ளார். ஆம்.., 62 வயதான நடிகர் ஜானி டெப், கடந்த ஜூன் 16ம் தேதி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் உள்ள நினோ ஜெசஸ் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனைக்கு தனது பிரபலமான கேப்டன் ஜாக் ஸ்பாரோ கெட்அப்பை அணிந்து சென்று அங்கிருந்த குழந்தைகளை மகிழ்வித்தார். Johnny […]
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம் குறையாமல் இருக்கிறது. இந்த போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் மற்றும் டிரம்பின் […]