அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை, க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பால்கான் 9 ராக்கெட் அழைத்துச் […]
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெஹ்ரானில் உள்ள ஈரானின் ஆட்சி மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு (IDF) உத்தரவிட்டார். இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த போர் […]
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல் இருப்பது குறித்து விளக்கம் அளித்தார். போரின் பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் உதவியை கோரியுள்ளார். இந்த கடிதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜூன் 23, 2025 […]
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெஹ்ரானில் உள்ள ஈரானின் ஆட்சி மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பாதுகாப்பு […]
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும், ஈரான் உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை. மறுபக்கம், டிரம்ப் அறிவித்த சில நேரம் கழித்து போர் நிறுத்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் […]
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தார்.ஆரம்பத்தில் இதனை மறுத்த ஈரான், தெற்கு இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில், ஈரான் தனது இறுதி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது, இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. […]
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக நீடித்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். ஆனாலும், ஈரான் உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை. ஆனால், இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் […]
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தவில்லை. முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், ”தற்போது, எந்தவொரு போர்நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் எந்த “ஒப்பந்தமும்” இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது. ஆம், அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (இந்திய நேரப்படி அதிகாலை 4:10 மணி முதல் 4:35 மணி வரை) ஈரானின் 3 அணு ஆயுத தளங்களை 7 B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் தாக்கியது. அதன்படி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் திட்டத்தை […]
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் கடுமையாகி வருகிறது, அதே நேரத்தில் ஈரானும் அமெரிக்காவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. ஆம்.., ஈரான் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலை ஆதரித்த அமெரிக்கா, கடந்த சனிக்கிழமை இரவு ஈரானின் மூன்று முக்கியமான அணு ஆயுதத் தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கியது. அதன் பிறகு ஈரான் அமெரிக்காவிற்கு […]
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மேற்கு ஆசிய உச்சக்கட்டத்தில் பதற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது பெரும் சந்தேகத்தை கிளப்புவதால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணாமாக, கத்தார், […]
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் பதிவில், ”இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும், ஈரான் முதலில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரம் கழித்து இஸ்ரேல் அமல்படுத்தும். இதன் மூலம் போர் அதிகாரப்பூர்வமாக 24 மணி நேரத்தில் முடிவடையும். இதை “12 நாள் போர்” என்று அழைக்க வேண்டும், இந்தப் […]
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் தரப்பு எச்சரித்திருந்தது. எனவே, அங்கு பதற்றம் உச்சத்திற்கு சென்றிருக்கும் சூழலில், ஈரானின் […]
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில்,நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தும் இருந்தார். ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி […]
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய தாக்குதல் 10வது நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. தற்போது, ஷாத், டெஸ்ஃபுல் மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஆறு ஈரானிய இராணுவ விமான நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் […]
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஈரானின் அணு உலகைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரானிய இந்த நடவடிக்கை உலக எரிசக்தி சந்தையில் கவலைகளை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் குறைப்பு ஏற்படக்கூடும். இது எரிசக்தி விலைகளை அதிகரித்து […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் குறித்து தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அதிபர் டிரம்ப், ”அமெரிக்க தாக்குதலில் ஈரானுக்கு மிகப் பெரிய […]
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் வெடிகுண்டு பெல்ட்டை வெடிக்கச் செய்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவில் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதலுக்கும் ISIS அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என […]
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. அதே நேரம் 400 பேர் பலியானதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 3,056 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சுழலில், ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க […]
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று […]