சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 12ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5% வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம். 61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம். பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது.முந்தைய காலங்களில் எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா? என்று அமைச்சர் ஜெயக்குமார் […]
கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மஜக கட்சி கூட்டணியில் ஆட்சி புரிந்து வந்த நிலையில் திடீரென ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோற்று தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆட்சிஅமைத்துள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறித்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். பாஜகவுக்கும் இந்த ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என கூறிவிட்டு சென்றார். இதற்க்கு சித்தராமையா, ‘ […]
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் […]
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், வேலூரில் வரும் 29,30 மற்றும்ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா. இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த […]
வாணியம்பாடியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். திமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும். அனைத்து பெண்களுக்கும் சம உரிமை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு ஆகும். முத்தலாக் விவகாரத்தில் ஜெயலலிதாவின் கருத்தை பின்பற்றுகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற […]
மாநிலங்களவையில் மதிமுக எம்.பி.வைகோ பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான் எச்சரிக்கிறேன் என்று பேசினார். இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எச்சரிக்கை எல்லாம் கொடுக்க கூடாது, சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று […]
12 ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பழமையை மாற்றி இருப்பதை குறிப்பிட்டு இது தமிழக அரசா இல்லை சமஸ்கிருத அரசா என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், எப்படி சகிப்பது இந்த கொடுமையை? தமிழ் மொழி 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம் அனால், சமஸ்கிருதம் மொழி 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகம் என்று கூறியுள்ளார். […]
இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்றார். இதன் பின்னர் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் . இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான்.பிரதமர் மோடி, அமித் ஷா […]
கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியில் 1943 ம் ஆண்டு பிறந்தவர் B.S.எடியூரப்பா. இளமையிலே அரசியல் ஈடுபாடு கொண்ட எடியூரப்பா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக இருந்து வந்துள்ளார்.தொடர்ந்து, நாட்டில் அவசர நெருக்கடி அமலில் இருந்த காலங்களில் மக்களுக்கான பொது பணிகளில் ஈடுபட்டு வந்தார். அரசியலில் பெரும் தலைவராக உருவான எடியூரப்பா 1984 ம் ஆண்டு கர்நாடக மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு, 1994 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதி தேர்தலில் முதன் […]
நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் ராமதேவி குறித்து அவதூராக பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற அவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அப்போது, பேசிய ஆசம்கான் ராமதேவி குறித்து ஆட்சேபத்திற்கு உரிய கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி க்கள் பலரும் கூச்சலிட்டனர். ஆசம்கான் […]
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி […]
கடந்த ஜூலை 23-ஆம் தேதி நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மட்டும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஆனால் கொலை நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் எந்த ஒரு தகவலும் முழுமையாக பெறமுடியாத நிலை உள்ளது. இந்த கொலைக்கு மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் தான் முக்கிய காரணம் என்று தகவல் அதிகம் வெளியாகிவந்தது.மேலும் உமா மகேஸ்வரியை அரசியல் காரணத்திற்காக கொலை செய்ததாகவும் தகவல் […]
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப்பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.இந்த கூட்டணியில் பாஜக ,பாமக,புதிய தமிழகம்,தேமுதிக ,புதிய நீதிக்கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,அதிமுக கூட்டணியில் உள்ள பாமக […]
கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து கருத்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டது. நேற்று இயக்குனர் ரஞ்சித் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்து இருப்பார் என்று கூறினார். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறிப்பிட்ட சமூகத்தினரின் […]
நெல்லையில் கொலை சம்பவம் நடந்த உமா மகேஷ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர் . ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் என்று குற்றவாளிகளை தேடி […]
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள […]
கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இது குறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் […]