கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. ஆதலால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இதுகுறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை க்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கைக்கு கருத்து தெரிவிக்கும் தேதி நேற்றுடன் முடியும் சூழலில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைவரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் 5,000 […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .வரும் 27ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின் 28 மற்றும் 29 ஆகிய […]
ராஜராஜசோழன் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறிய விமர்சனத்தை ஏற்று என்னோடு உரையாட வந்திருப்பார் என்று இயக்குனர் ப.ரஞ்சித் கூறியுள்ளார். கடந்த மாதம் தஞ்சை அருகே திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் ப.ரஞ்சித் தஞ்சையை ஆண்ட மாமனார் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் […]
சில முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ள காரணத்தால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி(இன்று ) வரை நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால் கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கையை […]
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்வி கொள்கை […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.எனவே அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார் வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும்.பேரணாம்பட்டு பகுதியில் 5 ஆயிரம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக தான் தேர்தல் தள்ளி போனது. […]
கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த […]
திருநெல்வேலி மாநகர முன்னாள் திமுக மேயராக இருந்த உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை வழக்கில் புதிதாக பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளாகவும் அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கடந்த 23 ம் தேதி பிற்பகலில் திருநெல்வேலி மாநகரம் ரெட்டியார்பட்டி சாலையில் இருக்கும் மேயர் இல்லத்தில் மூவர் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் கொலை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் […]
நாடாளுமன்றம் மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளியேறினர். நாடாளுமன்றம் மக்களவையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் தடுப்பு மசோதா ஆவணத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் படி, இஸ்லாமிய ஆண்கள் தங்கள் முறைப்படி பெண்களை மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம். முத்தலாக் சட்டம் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்கட்சிகளான திமுக மற்றும் […]
சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக கோவில்களில் சிலை கடத்தல் காணமால் போன குற்றங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சிலைகள் கடத்தல் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில். பொன்.மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தில் யார் […]
23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று பதவியேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குரல் எதிரொலித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் போது பிரதமர் நரேந்திரமோடியும் இன்று மாநிலங்களவை அவைக்கு வந்திருந்தார். வைகோ பதவியேற்கும் போது பிரதமர் உட்பட பலர் கை தட்டி வரவேற்ப்பு அளித்தனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது முதல் கேள்வியாக இந்தியாவில் மூடப்பட்ட நூற்பாலைகள் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலூரில், வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிகளில், ஏ.சி.சண்முகத்தை […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழகம் வலியுறுத்தலால், பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தில் இயங்கும் கார்களை ஊக்குவிப்பதற்காக, அதன் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் கார், இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி குறையும் போது அதிகமாக பேட்டரி கார்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன் ?என்றும் நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி […]
உமா மகேஸ்வரியின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு முதல் 2001-ஆம்ஆண்டு வரை திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர […]
மாநிலங்களவை எம்பி-யாக இருந்த அதிமுகவின் மைத்ரேயனின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது.இந்த நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது .தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை . ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளது என்று தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது.அதேபோல் 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் […]
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வே திமுக செய்த பொய் பிரச்சாரத்தை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட்டனர்.தற்போது உண்மை தெரிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார்
நேற்று முன்தினம் நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின் நேற்று நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஷ்வரியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை […]