மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய முதல் கேள்வி – கை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி!

Default Image

23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று பதவியேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குரல் எதிரொலித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் போது பிரதமர் நரேந்திரமோடியும் இன்று மாநிலங்களவை அவைக்கு வந்திருந்தார். வைகோ பதவியேற்கும் போது பிரதமர் உட்பட பலர் கை தட்டி வரவேற்ப்பு அளித்தனர்.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது முதல் கேள்வியாக இந்தியாவில் மூடப்பட்ட நூற்பாலைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது,  சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் உள்ள நூற்பாலைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஷமிருதி ராணி சீனாவில் இருந்து எந்தவித ஆயத்த ஆடைகளும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறினார்.இதையடுத்து பேசிய வைகோ அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்