கர்நாடகா சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் களோபரமாக நடந்து வருகிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அவையில் பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றதால் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அதில், ‘ சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், சபாநாயகர் நேரம் கடத்துவதையே குறியாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளுநர், சபாநாயகருக்கு, […]
இன்று கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டப்பேரவையில் குற்றச்சாட்டியுள்ளார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏக்களை மீட்டு தருமாறு சபாநாயகரிடம் அமைச்சர் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் புகைப்படங்களை காட்டி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். இதனால் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர் பாஜக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள். அமளியால் கர்நாடக பேரவையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது. ஆனால் வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.மேலும் தினகரனும் தேர்தலில் போட்டியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடாத நிலையில் […]
2009-ம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தேசதுரோக வழக்கிற்காக வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ,ரூ 10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விட்டது. இதனால் வைகோ தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதில் தனக்கு கொடுத்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , […]
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படுக்கை வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், ஆம்னி பேருந்துகளில் இருக்கை வசதிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,மேலும் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க […]
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,அமமுக மாபெரும் சக்தி. சசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம், நிச்சயம் வெளியே வருவார். சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது.உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என்று கூறினார்.
சட்டப் பேரவையில் உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்திட கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்கும் வகையில் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு குழு ஒன்று அமைத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசினார். இந்தக் குழு அண்மையில் நடத்திய முதல் கூட்டத்தில் சட்ட மற்றும் உள்துறை அமைச்சகத்தை சார்ந்த பிரதிநிதிகள் இது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூரில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற […]
பேரவையில் அமைச்சர் வேலுமணி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே விவாதம் நடைபெற்றது. அமைச்சர் வேலுமணி பேசுகையில்,உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது.இதற்கு ஸ்டாலின் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது.மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அமைச்சர் வேலுமணி பதில் அளிக்கையில், வார்டு வரையறைகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. .ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை நடைபெறும் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் அதிகளவு பணப்பட்டுவாடா நடையப்பெற்றதாக கூறி, அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சமீபத்தில் வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என வெளியானது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் இவர்தான் வேட்பாராக […]
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க […]
தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அவர் பேசுகையில், நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ரிஜெக்ட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.ரிட்டன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது என்று கூறினார். நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும் . […]
முதலமைச்சர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கோடி செலவில் புற்றுநோய் சிறப்பு மையம் உருவாக்கப்படும். 296 சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். ஈரோடில் உயர் சிறப்பு மருத்துவமனையாக உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும். சென்னை கே.கே.நகர் மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனை மையம் அமைக்கப்படும். 23 அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் 32 தானியியங்கி மையங்கள் அமைக்கப்படும். சேலத்தில் புதிய […]
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.இதன்பின்னர் எதிர்கட்சித் துணைத்தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி . நீட் விவகாரத்தில் மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என்றும் கேள்வி […]
சூர்யாவை பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா, புதிய கல்வி கொள்கையை கடுமையாக சாடினார். அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரின்றி படிக்கும் போது நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார்.இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு கூறுகையில், சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஆண்டுகள் கடந்துவிட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. இன்று மாநில தேர்தல் ஆணையம் கூறுகையில், ‘ அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும்.’ என உறுதி கூறியது. இந்த உறுதியை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்தது.