கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .அவர்களது மனுவில் ,தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும், ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்டது . நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டைவேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட உள்ளது .புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என்று கூறினார்.மேலும் வேலூர் மக்களவைத் தேர்தலில் ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவார்.அவருக்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது .ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. திட்டத்தை சட்ட ரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பேருந்துகள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேன்று சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேருந்துகள் 100 இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவற்றில் , 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் , 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்புகளை வெளியிட்டார் .அவர் வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சையை தரம் உயர்த்த ரூ.25.41 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையம் ஏற்படுத்தப்படும்.தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு ரூ.26.39 கோடியில் கூடுதலாக 121 ஊர்திகள் வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் ரூ.21 கோடி […]
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.இவரின் வரவு உத்திர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.உ .பி யில் உள்ள 80 தொகுதியில் ரே பரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதனால் பிரியங்கா காந்தியின் வரவு உ .பி யில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் உ […]
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .அவர்களது மனுவில் ,தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் .முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு சென்னையில் 80 பேருந்துகளும் தலா 10 பேருந்துகள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் இயக்கப்படும். கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் முரளிக்குமார் என்பவரை வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை மண்டல வருமானவரி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் கடும் […]
அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வாய்ப்பு இருக்கிறதா என்று ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பிரபல ஜோதிடரிடம் கேட்ட கேட்டார். அதற்க்கு வெளிவந்த பதிலால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின். சேலத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் . தற்போது இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி இருக்கிறார். இந்திய அளவில் ஜோதிடர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர். குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் சொன்னது அனைத்தும் அடுத்து அடுத்து […]
பயணிக்க தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்கக் கட்டணங்களை மக்கள் முறையாக கட்டிட வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சுங்க கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றியை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் நடிகை ரோஜா தனது தொகுதி மட்டுமல்லாமல் மற்ற தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என பரவலாக பேசப்பட்டது. ஆகையால் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என […]
தமிழக சட்ட பேரவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பல திட்டங்களை அறிவித்தார். தில் முக்கியமானது பிரமாண்ட யோகா மையமும், அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வசதியும் ஆகும். செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட யோகா மையம் ருபாய் 92 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும், மனநல மருத்துவமனையில் உயர்தர மருத்துவ வசதிக்காக 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம், அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்க இன்வெர்ட்டர்கள் அமைக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக சார்பில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.’ ஆனால் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். இந்த விவரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ 2017 பிப்ரவரி மாதம் தமிழக அரசு […]
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தள எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் வருகின்ற 19-ம் தேதி ராமசாமி படையாட்சியார் படம் திறக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். ராமசாமி படையாட்சியார் படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே சட்டப்பேரவையில் படம் இடம் பெற்றவர்களின் விபரங்கள் : திருவள்ளுவர் மகாத்மா காந்தி அம்பேத்கர் காயிதே மில்லத் காமராஜர் முத்துராமலிங்க தேவர் ராஜாஜி அண்ணா எம் .ஜி .ஆர் ஜெயலலிதா தந்தை பெரியார்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்க்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அக்டோபர் 31க்குள் பதில் அளித்துவிடுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சிக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்ததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக, உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கேள்வி கேள்வி எழுப்பியதற்கு இந்த பதிலை மத்திய அமைச்சர் தெரிவித்தார். […]
கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை. அதேபோல் அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தவர் […]