திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் எதிர்ப்பை மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடத்தப்பட்டது குறித்து பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.அவர் அளித்த பதிலில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொண்டு அடுத்தக்கட்ட முடிவை எடுக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார். தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எந்த இடத்திலும் முதல்வர் கூறவில்லை.24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏதாவது ஒரு […]
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.மேலும் 5 எம்.எல்.ஏ.க்களும் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் ராஜினாமா […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளர்.அவர் வெளியிட்ட அறிக்கையில்,உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும். அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று […]
அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக உடைமைகளை இழந்து பல்லாயிரக்கண மக்கள் தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவ மழையானது தற்போது அசாம் மாநிலத்தில் பலத்த மழையாக பெய்து வருகிறது. இதனால் ஜோர்காட், ஜோனித்பூர் உட்பட 28 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 11 உயிரிழந்துள்ள நிலையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவு, […]
பொய்யான வாக்குறுதிகள் என்னும் கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக என்று தமிழிசை கூறியுள்ளார். திமுக ஊழல் விஞ்ஞானிகள் நிறைந்த கட்சி என்றும் காட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு இன்று அறிக்கை விட்ட அவர், மத்திய அமைச்சரவையில் அவை குறிப்பில் இடம் பெறாத கோஷங்கள், மனுக்கள் ஆகியவற்றை திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ததாய் பெருமை கொள்வது நியாயம் தானா என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் […]
பேரவையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள 8 கோவில்களில் ரூ 4.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 4 கோவில்களில் ரூ 96.93 லட்சம் மதிப்பீட்டில் குளியலறை மற்றும் கழிவறைகள் கட்டப்படும். மலை மேல் அமைந்துள்ள 2 திருக்கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர ரூ 1.44 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை சீரமைக்கப்படும். திருப்புகழ் அருணகிரி நாதர் […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கோழிப்பண்ணைகளில் ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளத்தின் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.பண்ணையாளர்கள் நலன் கருதி சோளம் இறக்குமதிக்கு வரியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தபால் துறையில் தமிழில் தேர்வு எழுத முடியாது என்பது தமிழக மாணவர்கள் தபால் துறையில் பணிக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கும்.இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்து உள்ளது . இதற்கும் சேர்த்து வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அகரம் எனும் அறக்கட்டளையை நடத்திவருகிறார். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சூர்யா, புதிய கல்வி கொள்கையை கடுமையாக சாடினார். அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரின்றி படிக்கும் போது நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார். இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கண்டனங்களை பதிவு செய்து இருந்தார். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக […]
புதிய கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசியிருக்கிறார் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யாக்கு என்ன தெரியும் என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மூன்று வயதிலே மூன்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் மூன்று வயது குழந்தைகள் இதனை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் வினவி இருந்தார். எல்லோரும் அமைதியாய் இருந்தால் புதிய […]
உத்திரபிரதேச மாநிலம் பித்தாரி ஜெயின்பூர் தொகுதி பாஜக ஏம்.எல்.ஏ ஆக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவருடைய மகள் சாக்ஷி மிஸ்ரா. இவர் பாட்டியல் இனத்தைச் சார்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பாஜக எம்.எல்.ஏ கடும் எதிரப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில்,தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். மேலும் எங்களது உயிருக்கு ஏதேனும் ஆனால் அதற்கு […]
தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.அதை பயன்படுத்தி செந்தில் பாலாஜி வெற்றியும் பெற்றுள்ளார்.மற்றொரு முக்கிய நிர்வாகியுமான தங்க தமிழ் செல்வனும் அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் வேலூர் சட்டப்பேரவை […]
நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், பொதுப்பணித்துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. அவர் வெளியிட்ட அறிவிப்பில்,நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ137 கோடியில் புதிதாக நீர்த்தேக்கம், ஏரி கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள டைடல் பார்க் சந்திப்பில் ரூ110 கோடி மதிப்பீட்டில் இரண்டு “U” வடிவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
அஞ்சல் துறையில் வரும் சில காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு முதலில் அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என் அறிவிப்பு வெளியானது. இதனை பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல.’ என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய […]
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும், அகில இந்திய தேர்வுகளை எழுதலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தபால்துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .மாநில மக்களுடைய ஆர்வங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார் டி.ஆர்.பாலு.
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் . இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில், உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம். இந்தியை திணிப்பது தான், தனது கடமை என மத்திய அரசு எண்ணுகிறது .ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம் என்பதை செயல்படுத்த நினைக்கிறது மத்திய அரசு என்று தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் ஜெயக்குமார், இவர் அவ்வப்போது சில கலகலப்பான பதில்களை கூறிவிட்டு செல்வார். இன்று பேட்டி கொடுக்கையில் ‘ திமுக நியூசிலாந்து அணி போல கடைசிவரைக்கும் ஜெயிப்பது போல மாயை உருவாகும். ஆனால் இங்கிலாந்து அணி போல அதிமுக தான் வெற்றி பெரும். நிசிலாந்து அணி போல திமுக அரசியலில் தோற்கும்.’ என கூறிவிட்டு சென்றார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார். வல்லபாய் படேலின் சிலை போன்று இங்கு காமராஜரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். காமராஜருக்கு புகழ் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரத்குமார் நிரூபித்துள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன் அங்காடியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும்.ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று தமிழக சட்டமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.