சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி – கேரள தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியை கேரள தேவசம் போர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.
சபரிமலைக்கு விமானத்தில் வர விரும்புவார்கள் இதுவரை கொச்சி வந்து அங்கு இருந்து கார் மூலம் மட்டுமே பம்பைக்கு வர முடியும். இனி கொச்சியில் இருந்து காலடி வரை காரில் சென்று அங்கு இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். நிலக்கல் மற்றும் காலடியில் தற்போது ஹெலிகாப்டர் தரை இறங்கும் வகையில் தளங்கள் அமைக்கப்படுள்ளது.
நவம்பர் 16 ம் தேதி மகரவிளக்கு பூஜை துவங்கி ஜனவரி 6 ம் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும். அது வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும் என்று கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025