மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற கோரி முதலமைச்சருக்கு ஒரு லட்சம் தபால் கார்டு!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற ஒரு லட்சம் தபால் கார்டுகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி கோரிக்கை வைக்க பொது தொழிலாளர்கள் சங்கம் தீர்மானித்தது.
இதையடுத்து சீர்காழியில் கடந்த வாரம் தகவல்கள் எழுதி அனுப்பும் போராட்டம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரி வாசலில் மாணவிகள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தபால் அட்டையில் எழுதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்தனர்.
இதை பொதுதொழிலாளர் சங்க தலைவரும் , மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீர பாண்டியன் தொடங்கினர்.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025