அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போணிகபூர் தயாரித்துள்ளார். எச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். யுவன் இசையில் ஏற்கனவே படத்திலிருந்து பாடல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து படத்திலிருந்து அடுத்த பாடலாக அகலாதே எனும் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் அஜித் மற்றும் கதாநாயகி வித்யாபாலன் காதல் காட்சிகளாக உள்ளது. படத்தில் இருவருக்கும் காதல் காட்சிகள் இருக்கும் என இதிலிருந்து தெரிகிறது.
unknown node