சீன முன்னாள் மேயர் வீட்டில் 13 டன் தங்கக்கட்டிகள் பறிமுதல்..!

சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாங் குயின் . இவர் கடந்த1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் டான்ஜோவின் முன்னாள் மேயராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜாங் குயின் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஜாங் குயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஜாங் குயின் வீட்டில் இருந்து 13.5 ஆயிரம் கிலோ தங்க கட்டிகள் கிடைத்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் ஜாங் குயின் வங்கி கணக்கில் 2.61 லட்சம் கோடி ரூபாய் பணம் இருந்தது.இதனால் அவரது வங்கி கணக்கையும் அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.இவை அனைத்தும் மேயர் உட்பட பல பதவிகளில் இருந்த போது ஊழல் செய்தது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025