தமிழ் சமூகம் பொறுக்காது – சீமான் ஆவேசம்!

திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என பாஜகவினர் கருத்து தெரிவித்து வருவது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம், ‘ இது இந்திய நாடு, இந்து என கூறுகின்ற நாடு இல்லை. எனவும், திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. எனவும், தமிழர்கள் தற்போது நாகரீகமாக வாழ்ந்து வருவதால் வீதியில் இறங்கி போராட தயங்குகிறார்கள். அவர்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. இதற்க்கு மேல் தமிழர்கள் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த நபர்களை விரைவில் கண்டறிந்து தண்டனை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அரசியல் செய்ய நிறைய காரணம் இருக்கிறது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025