பிரபலமான திரை விமர்சகரை வெளுத்து வாங்கிய ஆனந்த்ராஜ்!

Default Image

தற்போது இணையதளத்தில் சினிமா விமர்சகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதில் திரைப்படங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்தும், தனி மனித விமர்சனம் செய்தும் பெயர் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அந்த குறிப்பிட்ட கலர்சட்டை விமர்சகர் இணையதள வாசிகளிடையே மிக பிரபலம்.
அவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை விமர்சனம் செய்கையில், விஜயின் வயதான தோற்றத்தை மிகவும் நக்கலாக பேசினார். அதிலும் 150 கோடி ருபாய் பட்ஜெட் போட்டு படம் எடுத்துள்ளார்கள். அந்த தாத்தாவிற்கு ( விஜயின் ராயப்பன் கதாபாத்திரம் ) விக்ஸ் மாத்திரை வாங்கி கொடுங்கள் என கிண்டல் செய்திருந்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து பத்திரிக்கையார்களிடம் நடிகர் ஆனந்தராஜ், தனி மனித விமர்சனம் தவறானது. இனி அவ்வாறு செய்தால் கண்டனத்திற்கு உள்ளாவீர்கள், படம் பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் படத்தினை மட்டும் விமர்சனம் செய்யுங்கள். தனி மனித விமர்சனம் வேண்டாம் என கூறிக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்