அறிவிக்கப்பட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் – ஆணையம் அறிவிப்பு

- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஊரக உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதற்கு எதிராக நேற்று தமிழக அரசு சார்பில் ,விதிமுறைகளை பின்பற்றித்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது ,எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025