தலைவர் 168 படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்த முக்கிய பின்னணி நடிகர்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினி காந்த்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இன்னும் சில வாரங்களில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இன்று தலைவர் 168 படத்தின் பூஜை நடைபெற்றது.இதில் இயக்குனர் சிவா,நடிகை குஷ்பூ ,மீனா ,இசையமைப்பாளர் இமான் ,ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சினிமாவில் பல நடிகர்கள் நடித்திருப்பினும் குறைந்த நிமிடத்தில் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதை கவர்ந்தவர்கள் சிலரே ,அதில் ஒருவர் ஜார்ஜ் மரியான் ஆவார்.இவரும் தற்போது சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் மதராசபட்டினம், கலகலப்பு, பொய் சொல்லப்போறோம் போன்ற படங்களிலும் தற்போது அண்மையில் வெளியான கைதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கைதி படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.அதன் பின்பு சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
#Thalaivar168Poojai pic.twitter.com/p1c70r7PD3
— Sun Pictures (@sunpictures) December 11, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025