தனுஷின் புதிய படத்தில் இணைந்த ‘ரேர் பீஸ்’ நடராஜ்! மீண்டும் இணைந்த பாலிவுட் ஜோடி!

- தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ரஞ்சகனா படத்தின் ஒளிப்பதிவாளராக நடராஜ் வேலைசெய்தார்.
- தற்போது தனுஷ் – இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடராஜ் நடிக்க உள்ளாராம்.
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்து அடுத்ததாக ஜனவரியில் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சதுரங்க வேட்டை நடராஜ் நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் நாயகியாக ராஜீஷா விஜயன் நடிக்க உள்ளார். இவர்தான் தனுஷ் முதன் முதலாக பாலிவுட்டில் நடித்த ராஞ்சஹானா படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர்தான் விஜய் நடித்த புலி படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025