புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Default Image
  • நாளை புதிய ஆண்டு பிறக்கிறது.
  • அதற்கான கொண்டாட்டங்கள் இன்று இரவு முதலே ஆரம்பமாகும் நிலையில் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.இதையொட்டி சென்னை போலீஸ்  சார்பில் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை  முழுவதும் சுமார் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

முக்கிய சாலைகளான மெரினா,சாந்தோம் ,காமராஜர் சாலை ,எலியட்ஸ் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகன ரசிங் ,குடிபோதையில் தகராறு ஆகியவற்றை கண்காணித்து தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.குடி போதையில் சிக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதி‌களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting