ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் : அவகாசம் கேட்டு கோரிக்கை

சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான, அதிமுக அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்எல்ஏக்களும், அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. அரசுக்கு எதிராக வாக்களித்த , எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும்,இபிஎஸ் தலைமையிலான அணியினரும் மீண்டும் ஒன்றிணைந்து, ஒரே அ.தி.மு.க.,வாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதையடுத்து, அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதீமன்ற நீதிபதிகள், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் பின் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025