மத்திய அரசுக்கு பயப்படுகிறது அதிமுக -மு.க.ஸ்டாலின்

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பேரவையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்தார். மேலும் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசுக்கு பயந்து தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற அதிமுக மறுப்பு தெரிவித்து விட்டது என்று தெரிவித்தார்.மேலும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் தீர்மானம் போட மறுக்கின்றனர் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025