சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி – திருமாவளவன்

தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் ஸ்டாலின் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் இதிலிருந்தே தெரிகிறது ஆட்சியாளர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.