சீனாவில் மீண்டும் தனது ஆட்டத்தை துவங்கிய கொரோனா! கொரோனாவால் மீண்டும் 2 பேர் பலி!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோயானது, மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளிலும் பல்லலாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், இதுவரை உலக அளவில் இந்த நோயால், 119,719 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் இந்த வைரஸ் நோயானது, கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது.
இதனையடுத்து, சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த அறிகுறியும் இல்லாமல், புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025