ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணா பல்கலைக்கழகம்.!

கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு தளங்களை ஒன்றிணைத்து பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவே செயலியை உருவாக்க வேண்டும். சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு வழங்கப்படும் எனவும் உரிய வேலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025