கௌதம் மேனன் குறும்படத்தின் டீசர் இதோ.!

Default Image

இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இயக்கத்தில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் குறும்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடி த்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் நடிகை திரிஷாவிற்கு ஐபோனில் குறும்படம் எவ்வாறு எடுப்பது என்று வீடியோ கால் மூலம் சொல்லி கொடுத்திருந்தார். 

அதிலிருந்து இவர்கள்  இருவரும் இணைந்து குறும்படம் எடுக்க போவதாகவும் கூறப்பட்டது. சிலர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இயக்கத்தில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் குறும்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார். இது விண்ணை தாண்டி வருவாயா-2 என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிம்பு மற்றும் திரிஷாவின் நடிப்பில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாடல்களும், காட்சிகளும் அனைவரது பேவரட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai