#Breaking : தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.!

தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து குணமடைவரின் ரத்தத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்திருக்கும். இதனால் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர் குறிப்பிட்ட நாளுக்கு ( 28 நாட்கள் ) பிறகு எந்த வித பாதிப்பும் இன்றி நல்ல உடல் நலத்தோடு இருந்தால் ரத்த தானம் அளிக்கலாம்.
அந்த ரத்ததில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மாவின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டவுடன் அந்த ரத்தமானது மீண்டும் பிளாஸ்மா தானம் அளித்தவரின் உடலுக்கே திருப்பி செலுத்தப்படும்.
இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025