ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனியை தொடர்ந்து, அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
இதனால் அங்கு 19 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, தற்பொழுது அவரின் மனைவி, மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
July 14, 2025