விடாத கொரோனா..உலகளவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

வேகமெடுக்கும் கொரோனா உலகளவில் 1 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு.
தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,087,839 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,466,329ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,436 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா மேலும் 13, 832 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,09,713 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025